Sunday, February 28, 2010

கிறுக்கி கிறுக்கியவை

தவறே... ஆயினும் தவறல்ல!!!

நல் விருட்சம் வளர்க்க, நீ

நிலமகளை காயப்படுத்துகிறாய்..

தவறே... ஆயினும் தவறல்ல!!!

என்னால் முடியும்.. இது தன்னம்பிக்கை

என்னாலன்றி எவறால் முடியும்; இது

தலைக்கனம். தலைக்கனமும் தவறில்லை தான்

நீ நல்லதொரு சாதனை படைக்க விரும்பினால்,

நல்வித்து பல உருவாக்க விரும்பினால்,

நாடு நலம் பெற விரும்பினால்,

தவறே... ஆயினும் தவறல்ல!!!

அழகாய் ஒரு வாழ்க்கை

வாழ்க்கை அழகாய் இருக்கிறது.

எனைச் சுற்றி எல்லோரும் நல்லோராய்,

எனை விரும்பும் நெஞ்சங்களும், நான்

விரும்பும் நெஞ்சங்களும் புடை சூழ,

புரிய வேண்டியவை புரிந்து, புரிய

அவசியமற்றவை எள்ளளவும் புரியாமல் ....

அழகாய் இருக்கிறது வாழ்க்கை.,

மிக மெதுவாய் நகர்கிற்து, இது

சின்னதொரு பிள்ளையின் ஓரகவை

நடையை போலவே......

அழகாய் தான் இருக்கிறது.

நிலா

சிறு வயதில் பாட்டி வடை

சுட்டதாய் தெரிந்த நிலா

இன்று என்னவளின் முகமாய்

தெரிகிறது ஏனோ?!

நிலவு மாறி விட்டதா; இல்லை

என் நினைப்பு மாறி விட்டதா??

விட்டுக்கொடு வாழ்வு இனிமையாகும்....

உனை விரும்பும் நெஞ்சம் விரும்பாததை,

நீ விரும்பிய போதும் விட்டுவிடு, அதனை

ஏனெனில்.........

விரும்பியதை விட்டுத் தள்ளுதல் எளிது

விரும்பாததை சகித்துக் கொள்வது கடினம். :(

FLAME OF THE FOREST

பெயரிட்டவனுக்கு உன் பூவாலே

பூச்செண்டு அளிக்க வேண்டும்.

மிகப் பொருத்தமாய் பெயரிட்டவனெவனோ?

உவமை அழகாய் இருக்கிற்து.

பொய்மை உவமை அல்லவா...

நெருப்பு இத்துணை அழகா???

கண்டவுடன் உன்பால் ஈர்ப்பு

சக்தியின் அடையாளமாய் உன்னிறம்,

உத்வேகத்தை அளிக்கிறாய் நீ....

DIVERSIFIED AGRICULTURE

இக்கரையில் நடுகை நிலம்

அக்கரையில் அறுவடை நிலம்

வான் மழையை எதிர்கொண்டு, அரசாள்பவனை

சாடாமல் நிலத்தடி நீர் கொண்டு பயிரிடும்

என் பண்பாளனே, விவசாய அன்பனே!

உன்னால் உன் குடும்பம் வாழ்கிறது.

இம்மாநிலமும் தேசமும் எல்லாம் வாழ்கிறோம்.

வாழ்க நீ! வாழிய நின் பணி!!!!

Ailanthus excelsa

பெயரறியா மரமாய், உன்

வாசம் மட்டும் அறிந்திருந்தேன்.

அறிந்தேன் நான் இப்போது

பெயரொடு உன் பயனும்.

தீக்குச்சி தயாரிப்பில்

பெரும்பங்கு ஆற்றுபவன் நீ!!

திருச்சி

பேருந்தில் பயணம் செய்யும்போது மட்டும்

அதிகாலை நேரத்தில் பேருந்துநிலையம் பார்த்திருந்தேன்.

சாலையோர வீடுகளையும் கடைகளையும் திருச்சியின்

அடையாளமாய் கண்டு போதையேறவில்லை.

மலைகளும், மரங்களும், செடிகளும், கொடிகளும்,

மாடுகளும், ஆடுகளும், பட்டிக்காட்டு மனிதர்களும்

இதோ முதன்முறையாய் என்முன் திருச்சியில்.

இரசிக்கிறேன், ஜன்னலோர வெயில், எனைக்

கடக்கும் அரவாணி, புழுதியிறைக்கும் செங்காடு

எல்லாம் இன்பமாய்....

வசந்த வாசல்

சின்னதாய் இல்லம்

மகிழ்வாய் இல்லாள்

அறிவாய் மக்காள்

சுவையாய் உணவும்

சுகாதரமாய் வாழ்வும்...


இரயில் பயணம்

கருவேலங்காடு அதனருகில்

மாந்தோப்பு

வேப்பமர நிழலில் இளைப்பாறும்

குடும்பம்.

காற்றில் இருமார்ப்போடு அசையும்

எருக்கம்பூ.

விந்தை

அதிகாலையிலும் அகிலம்

அழகாய்த் தானிருக்கிறது!!!!

உச்சிவேளையிலும் உலகம்

உன்னதமாய் இருக்கிறது.

பொழுதுசாயும் பொழுதிலும் புவி

புத்துணர்வை அளிக்கிறது.

இருள்மருளும் நேரத்திலும் இது

இன்னுமோர் அர்த்தமியம்புகிறது

எப்படித்தான் படைத்தாயோ??? எண்ணி

எண்ணி வியந்து பூரிக்கிறேன்....